News July 18, 2024

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி மரணம்

image

ஒசூர் அடுத்த தளி அருகே பனசமான தொட்டி கிராமத்தில் யானை மிதித்து விவசாயி பரமேஸ்வரன் (40) உயிரிழந்தார். தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயி பரமேஸ்வரனை யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Similar News

News September 9, 2025

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

image

மாவட்டங்கள் தோறும் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டி நடைபெற்று கொண்டு வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டி கிருஷ்ணகிரியில் உள்ள எஸ்டிஏடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.

News September 9, 2025

கிருஷ்ணகிரியில் 2000 போலீசார் பாதுகாப்பு பணி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வருகை தரவுள்ளார். முதல்வர் வருகையொட்டி போலீசார் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் தலைமையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உட்பட, 8 மாவட்டங்களிலிருந்து, 2,000க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர்.

News September 9, 2025

BREAKING: கிருஷ்ணகிரியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

image

நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம், 2026 தேர்தலை நோக்கிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, மாவட்ட வாரியாகப் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். வரும் செப்.13-ல், திருச்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் விஜய், நவ.1 கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயைக் காண, தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

error: Content is protected !!