News July 18, 2024
விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் விருதுநகர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளது.
Similar News
News October 15, 2025
போட்டோகிராபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன்(55). இவர் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் முருகேசன் நிகழ்ச்சி ஒன்றுக்கு வீடியோ எடுக்கச் சென்ற போது 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து, இதுகுறித்து வெளியே கூற கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News October 14, 2025
விருதுநகர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News October 14, 2025
விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் வரும் அக். 17ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.