News July 18, 2024

தீவிரவாதம் இல்லாத பகுதியே இல்லை: உமர் அப்துல்லா

image

ஜம்முவில் தீவிரவாதம் குறைந்துள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது என அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்முவில் கடந்த ஒரு வருடமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர், பாஜக அரசு இங்கு நடைபெறும் கொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 26, 2025

விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

image

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.

News November 26, 2025

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. அதன்படி, அரியலூர், கோவை, கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தி.மலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்

News November 26, 2025

ஜனநாயகத்தின் அடித்தளம் உதித்த நாள் இன்று!

image

இந்தியா எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி உதித்த நாள் இன்று. சுதந்திர இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களின் நீதி, சமத்துவம் & சுதந்திரத்தைப் பாதுகாக்க ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டிருந்த சட்டம் போதுமானதாக இல்லை. இதனால் அம்பேத்கரின் தலைமையில் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாள்களில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, 1949-ம் ஆண்டு நவம்பர் 26 தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

error: Content is protected !!