News July 17, 2024
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் அறிவித்த முதல்வர்

தஞ்சாவூர் அருகே இன்று விபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் சிறப்பு சிகிச்சைக்கு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையை சேர்ந்த சிலர் பாதையாத்திரையாக சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தோர் சிகிச்சையில் உள்ளனர்.
Similar News
News August 18, 2025
புதுக்கோட்டை: போன் தொலைந்தால் இத பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News August 18, 2025
புதுக்கோட்டை: மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில், குளத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 18, 2025
இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக 18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சி 18ம் வார்டு பகுதி பொதுமக்களுக்கு தொண்டைமான் நகர் சமுதாயக் கூடத்திலும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பிலியவயல் ஊராட்சி வம்பரம்பட்டி சமுதாயக் கூடத்திலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் உள்ள வசந்தம் திருமண மகாலில் நடைபெற உள்ளது.