News July 17, 2024
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

SBI வாடிக்கையாளர்கள், மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் தொகையை அறியும் சேவையை வீட்டிலிருந்தவாறே பதிவு செய்யும் முறை.
*SBI வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண் மூலம் REG என டைப் செய்து, 092234 88888 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.
*10 நிமிடங்களில் உங்களது மொபைல் எண், மிஸ்டு கால் சேவையில் இணைக்கப்படும்.
*9223766666 என்ற எண் மூலம் பேலன்ஸ், 9223866666 என்ற எண் மூலம் கடைசி 5 பரிவர்த்தனை விவரங்களை அறியலாம்.
Similar News
News November 26, 2025
நகை திருட்டு வழக்குகளில் இழப்பீடு தர அரசுக்கு உத்தரவு

2022-ல் கொள்ளை வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கோரி, ஒருவர் மதுரை HC-ல் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த HC, திருட்டு வழக்குகள் மீதான போலீஸின் மெத்தனமான போக்கையே இது காட்டுவதாக சாடியது. திருடுபோன பொருளின் மதிப்பில் 30%-ஐ மாநில அரசு தரவும் HC உத்தரவிட்டது. ஒருவேளை காணாமல் போன பொருள்கள் மீட்கப்பட்டால், இந்த இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர் திருப்பி அளிக்க வேண்டும் எனவும் HC தெரிவித்துள்ளது.
News November 26, 2025
கலாசாரத்தை சிதைக்கும் மார்க்ஸியவாதிகள்: RN ரவி

கார்ல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் இந்தியாவின் நாகரிகத்தையும், கலாசாரத்தையும் சிதைப்பதாக கவர்னர் RN ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியர்கள் பசுவையும், குரங்கையும் வழிபடுவதால், ஏகாதிபத்தியம் அவர்களுக்கு தேவை என கார்ல் மார்க்ஸ் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் நம்முடைய வரலாற்றை தேடி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.
News November 26, 2025
இவர்களெல்லாம் சுக்கு மல்லி காபி குடிக்கக்கூடாது

சுக்கு, மல்லி, மிளகு, கருப்பட்டி ஆகியவற்றை இடித்து, நன்றாக கொதிக்க வைத்து குடிக்கும் சுக்கு மல்லி காபியால் பல நன்மைகள் இருந்தாலும், அதனை ஒரு சிலர் தொடர்ந்து குடிப்பது நல்லதல்ல. நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப்போக்கு அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு 1 (அ) 2 முறை மட்டுமே பருகலாம் என டாக்டர்கள் கூறுகின்றன. மேலும், அறுவை சிகிச்சைகளுக்கு முன்பும் குடிக்கக்கூடாது. Share it.


