News July 17, 2024

சவாரி ஏற்றுவதில் தகராறு: ஆட்டோ ஓட்டுநர் கொலை

image

சிக்கந்தர்சாவடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநரான ஜோதிபாசுக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர், ஜோதிபாசுவை வெட்டி படுகொலை செய்தார். படுகாயமடைந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 4, 2025

BREAKING மதுரையில் பள்ளி வாகனம் விபத்து

image

மதுரை – உசிலம்பட்டி அருகே தொட்டப் நாயக்கனூர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மதுரை – தேனி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் காவலர் வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 4, 2025

மதுரை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

image

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2025 ஆகும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

தற்காலிக ஊழியர்கள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

image

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பில் சுமார் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதன் எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்தனர். பின்னர் இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதில் வரி குறைப்பு சலுகை பெற்றவர்கள் அபராதத்துடன் உரிய தொகையை திரும்ப செலுத்திவிட்டனர். இதனால் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!