News July 17, 2024

முன்னாள் அரசு ஊழியருக்கு ரூ.50 அபராதம்

image

பொய் தகவல்களை கூறி வழக்கு தொடர்ந்த தமிழக அரசு போக்குவத்து கழக முன்னாள் ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று அபராதம் செலுத்த சீனிவாசனுக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார். சன்றிதழில் தவறாக குறிப்பிடப்பட்ட பிறந்தநாளை மாற்ற வலியுறுத்து விழுப்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Similar News

News August 25, 2025

விழுப்புரம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

image

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது, இருக்கை பட்டையை (சீட் பெல்ட்) கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது விபத்துக்களின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

செஞ்சி: புதிய அரசு தொழிற்பயிற்சி தொடக்க விழா

image

செஞ்சி விழுப்புரம் சாலையில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த இவ்விழாவில், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் பங்கேற்றனர். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மற்றும் மேல்மலையனூர் சேர்மன் நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

News August 25, 2025

விழுப்புரம்: GH சரி இல்லையா? ஒரு கால் போதும்…

image

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511561>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!