News July 17, 2024
தர்மபுரி:மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 10 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் சந்து கடைகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசு பாதத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள மதுவிலக்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மதுவிலக்கு பிரிவு காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News November 6, 2025
தருமபுரி: காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று (நவ.05) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
News November 5, 2025
தருமபுரி: காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (நவ.05) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
News November 5, 2025
இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (05.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் குப்புசாமி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


