News July 17, 2024
நெல்லை – ஷாலிமார் இடையே சிறப்பு ரயில்

நெல்லையில் இருந்து நாளை (ஜூலை 18) மற்றும் 25 ஆகிய தேதிகளில், நள்ளிரவு 1.50 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் இரவு 9 மணிக்கு ஷாலிமார் சென்றடையும். அதேபோல, ஷாலிமாரில் இருந்து வருகிற 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நெல்லை வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
நெல்லையில் ரூ,15 லட்சம் வரை விபத்து காப்பீடு

நெல்லை மாவட்டத்தில் 449 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.
News July 11, 2025
புனிதப் பயணம் மேற்கொள்ள நிதி உதவி மக்களுக்கு அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
News July 11, 2025
நெல்லை:பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

நெல்லை மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வரும் 12ம் தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம். இதற்கான உரிய ஆவணங்களை மக்கள் கொண்டு சென்று பயன்பெறலாம் என ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.