News July 17, 2024
இலவச ஆன்மிக சுற்றுலா: விண்ணப்பிக்க இன்று கடைசி

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலாவிற்கு செல்ல விரும்புவோர், இன்று (ஜூலை 17) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு 1800 4253 1111
Similar News
News July 10, 2025
விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் செல்கிறார். அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை ரூட் ஷோ நடத்துகிறார். பின்னர், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். இந்தப் பயணம் வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
News July 9, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜுலை 9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

இன்று (09.07.2025) காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி. வெ.ஆறுச்சாமி, தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தூய்மைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.