News July 17, 2024
அதிமுகவின் பிரபல பேச்சாளர்கள் மீது வழக்கு

கரூர் சின்னதாராபுரத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் தலைமை பேச்சாளர்கள் சாம்ஸ் கனி, திலீபன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, அவதுாறாக பேசியுள்ளனர். இதையடுத்து எஸ்.ஐ. மகாமுனி கொடுத்த புகாரின் பேரில், சின்னதாராபுரம் போலீசார் இருவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 21, 2025
கரூர்: கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் காலபைரவர்

கரூர்: தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 21, 2025
தேசிய போட்டிக்கு கரூர் வீரர் தேர்வு

கரூர் வீரர் சீனியர் பிரிவிலான தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு. எதிர் வரும் தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு சீனியர் பிரிவில் தமிழக அணி சார்பாக விளையாட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த M.பிரசாந்த் என்ற வீரர் தேர்வாகியுள்ளார். இவருக்கு கரூர் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் Dr.ராஜேந்திரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News April 21, 2025
கரூரில் வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூர்: புகழூர் மூலிமங்கலம் பிரிவு அருகே நேற்று மெக்கானிக் தனசேகர் காரை ஓட்டி வந்தபோது, கார் மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனணத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கரூரில் வெயில் சதம் அடித்து வரும்நிலையில் அடிக்கடி பேட்டரி வாகனங்கள், கார் ஆகியவை தீ பற்றி எரிவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.