News July 17, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் இன்று அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, சென்னையில் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.

Similar News

News November 24, 2025

சென்னையில் எவ்வளவு மக்கள்தொகை தெரியுமா?

image

உலகளவில் நகர்ப்புற மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அதன்படி, 2024-2025-ம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நகரங்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 24, 2025

டிச.1-ல் குரூப்-1 முதன்மை தேர்வு தொடக்கம்

image

குரூப்-1 முதன்மை தேர்வு டிச.1 முதல் டிச.4-ம் தேதி வரை நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது. Prelims-ல் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpscexams.in தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், தேர்வில் கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவாக பதிவு செய்யப்படவுள்ளது.

News November 24, 2025

இந்த பொம்மையால் குழந்தைக்கு ஆபத்து.. BIG ALERT!

image

குழந்தைகள் இருக்கும் வீட்டில் டெடி பியர் போன்ற சாஃப்ட் டாய்ஸ்கள் கட்டாயம் இருக்கும். இப்படி நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கித்தரும் பொம்மையால் உங்கள் குழந்தையின் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படலாம். ஆம், சாஃப்ட் டாய்ஸ்களில் உள்ள முடி எளிதில் உதிரக்கூடியவை. அந்த முடி குழந்தைகள் சுவாசிக்கும்போது அவர்களின் உடலுக்குள் போகலாம். இதனால் அவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.

error: Content is protected !!