News July 17, 2024
விழுப்புரத்தில் தேர்தல் விதிகள் ரத்து செய்யப்பட்டது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 13ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை தற்போது தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று முதல் வழக்கமான அலுவலக பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News August 25, 2025
விழுப்புரம்: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்

தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு Readymade Garments அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தருகிறது. தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைய Readymade Garments அமைக்க இது உதவும். ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க. மேலும் விபரங்களுக்கு <<17509990>>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க
News August 25, 2025
விழுப்புரம் மக்களே ரூ.3 லட்சம் மானியம் வேண்டுமா?

கார்மெண்ட்ஸ் அமைக்க அரசு தரும் ரூ.3 லட்சம் மானியம் பெற குறைந்து 10 பேரை உறுப்பினராக கொண்ட குழுவாக இருந்து விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் BC/MBC/DNC சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது 20 மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *பிஸ்னஸ் பண்ண நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*
News August 25, 2025
ரூ.5 கோடி கடன் உதவி;தொழில் முனைவோருக்கு அழைப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ஆர்வமுள்ளவர்களுக்கு ₹5 கோடி கடன் உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்தக் கடன் தொகைக்கு அரசு மானியமும் உண்டு. இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.