News July 16, 2024

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

image

சிவகாசியில் இன்று ரயில்வே ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் முன்பு SRMU மதுரை கோட்ட உதவி செயலாளர் சிவகாசி கிளை பொறுப்பாளர் சீதாராமன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 2004 க்குப் பிறகு பணியில் சேர்ந்த இரயில்வே தொழிலாளர்களின் புதிய பென்சன் திட்டம் எனும் உத்தரவாதமற்ற மோசடி திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினர்.

Similar News

News October 15, 2025

போட்டோகிராபருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன்(55). இவர் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் முருகேசன் நிகழ்ச்சி ஒன்றுக்கு வீடியோ எடுக்கச் சென்ற போது 8 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை அளித்து, இதுகுறித்து வெளியே கூற கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News October 14, 2025

விருதுநகர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News October 14, 2025

விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் வரும் அக். 17ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!