News July 16, 2024
நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மாலை 7 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
நாகை: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை (1/2)

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போது மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும், விருப்பமுள்ளவர்கள் <
News August 19, 2025
நாகை: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News August 19, 2025
நாகையில் ஆறு மாத இலவச ஓவிய பயிற்சி

நாகை பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வார இறுதிநாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஓவிய பயிற்சி நடைபெற உள்ளது. 6 மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியுடன் ஒவிய பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9003757531 என்ற எண்ணை அழைக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.