News July 16, 2024

பாளையங்கோட்டை எம்.எல்.ஏ ஆய்வு

image

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், இன்று (ஜூலை 16) காலை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்தார். இதில், அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 13, 2025

நெல்லை மக்களே அனைத்து வரிகளும் இனி ஒரே இடத்தில்

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <>இங்கே கிளிக்<<>> செய்து கொள்ளலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். *SHARE*பண்ணுங்க.

News September 13, 2025

நெல்லை:பாலத்தில் தூங்குபவர்களை தடுக்க முயற்சி

image

திருநெல்வேலியின் முக்கிய அடையாளமாக திருவள்ளுவர் இரண்டு அடுக்கு மேம்பாலம் உள்ளது. கீழ்பாலத்தில் உள்ள சுவர் விளிம்புகளில் பலர் ஆபத்தை உணராமல் படுத்து தூங்குகின்றனர். இதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

நெல்லை: மண்டகப்படி நிர்வாகி தற்கொலை

image

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் திருமலை நம்பி கோயில் மலையடிப்புதூர் மண்டகப்படி விழா குழு நிர்வாகியாக உள்ளார். இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!