News July 16, 2024
தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
Similar News
News July 11, 2025
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு செப்டம்பர் 10க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி கலவர சம்பவம் சம்பந்தமாக இன்று வழக்கு விசாரணைக்கு நடந்தது. இதில் 87 பேர் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2ல் நீதிபதி ரீனா முன்னிலையில் ஆஜராகினார். மீதமுள்ள 29 பேர் பல்வேறு காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணை வருகிற செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News July 10, 2025
நள்ளிரவில் கூரை வீடு தீப்பிடித்து ரூ.3 லட்சம் பொருட்கள் நாசம்

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் ஒன்றியம் களத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு மகன் பிரபு. நேற்று (ஜூலை 9) இரவு குடும்பத்துடன் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
News July 10, 2025
அறிவியல் புத்தாக்க மானக் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாட்டு நலப்பணித் திட்ட இயக்குனரின் அறிவுறுத்தல் படி மாணவர்களுக்கு உயரிய விருதான அறிவியல் புத்தாக்க மானக் விருதுக்கு வருகின்ற ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு நடுநிலை பள்ளிக்கு மூன்று மாணவர்களும் உயர்நிலைப் பள்ளிக்கு ஐந்து நபர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.