News July 16, 2024
தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
Similar News
News August 21, 2025
வேலூர்: தாசில்தார், விஏஓ லஞ்சம் வாங்கினால், இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 21, 2025
புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய பேசிய டிஐஜி தர்மராஜ் காவல் நிலையங்களில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு நீண்ட நாட்களாக கோர்ட்டில் ஆஜராகாதவர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்
News August 21, 2025
காட்பாடியில் ரயில் சக்கரம் ஏறியதில் பெண் பலி

வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (36) விடுமுறை முடிந்து பணிக்கு செல்ல, மனைவி சிந்து (32) உடன் காட்பாடி ரயில்வே நிலையம் வந்தார். நேற்று (ஆக.20) காலை சபரி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயில் மெதுவாக கிளம்பியபோது, கணவரின் அடையாள அட்டை தன்னிடம் இருப்பதை உணர்ந்த சிந்து, அதை கொடுக்க முயன்றார். அந்த நேரத்தில் தவறி தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.