News July 16, 2024
நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

மதுரை மாநகர் செல்லூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் மர்ம நபர்களால் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்லபாய் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை, மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட துரத்தி விரட்டி கொலை செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 5, 2025
BREAKING: மதுரையில் மிக அதிக சாதிய வன்கொடுமை – திருமா

மதுரை, அண்ணா பேருந்து நிலையம் அருகே நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்கள் சந்திப்பில்; தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான சாதிய வன்கொடுமைகள் நடந்துள்ள மாவட்டம் மதுரை. எனவே மதுரை மாவட்டத்தை சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.
News September 5, 2025
மதுரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

மதுரையில் வைகை இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்களில் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் வைகை வடகரை, தென்கரைப் பகுதியில் 21 வார்டுகளில் செப்டம்பர் 6 (நாளை) மற்றும் 7 (நாளை மறுநாள்) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. வார்டு எண்கள் 27 முதல் 34 மற்றும் 75 முதல் 93 வரை உள்ள பகுதிகளில் லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்தி கொள்ளலாம். SHARE IT..
News September 5, 2025
மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் வெயில் மழை போன்ற காலநிலை மாற்றம் சுகாதார குறைபாடுகளாலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் புறநகரில் 128 பேர் காய்ச்சல் பாதித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணன் கூறும்போது 23 குழந்தைகள் 35 பெரியவர்கள் என மொத்தம் 58 பேர் காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சையில் உள்ளனர். ஏராளமான வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர் என்றார்.