News July 16, 2024
அந்தியோதயா விரைவு ரயில் ரத்து

ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை தொகுப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 23 – ஜூலை 31 வரையும், நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 22 – ஜூலை 31 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 5, 2025
BREAKING: மதுரையில் மிக அதிக சாதிய வன்கொடுமை – திருமா

மதுரை, அண்ணா பேருந்து நிலையம் அருகே நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்கள் சந்திப்பில்; தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான சாதிய வன்கொடுமைகள் நடந்துள்ள மாவட்டம் மதுரை. எனவே மதுரை மாவட்டத்தை சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.
News September 5, 2025
மதுரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

மதுரையில் வைகை இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்களில் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் வைகை வடகரை, தென்கரைப் பகுதியில் 21 வார்டுகளில் செப்டம்பர் 6 (நாளை) மற்றும் 7 (நாளை மறுநாள்) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. வார்டு எண்கள் 27 முதல் 34 மற்றும் 75 முதல் 93 வரை உள்ள பகுதிகளில் லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்தி கொள்ளலாம். SHARE IT..
News September 5, 2025
மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் வெயில் மழை போன்ற காலநிலை மாற்றம் சுகாதார குறைபாடுகளாலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் புறநகரில் 128 பேர் காய்ச்சல் பாதித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணன் கூறும்போது 23 குழந்தைகள் 35 பெரியவர்கள் என மொத்தம் 58 பேர் காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சையில் உள்ளனர். ஏராளமான வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர் என்றார்.