News July 15, 2024
இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் மோசடி

இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் குறிப்பிட்ட சில செல்போன் எண்களுக்கும், இ-மெயிலுக்கும் மோசடி கும்பல் SMS அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்சலை சரியான முகவரி இல்லாததால், டெலிவிரி செய்ய முடியவில்லை. எனவே, பார்சல் திரும்ப பெறப்படுவதை தவிர்க்க, 48 மணி நேரத்தில் முகவரியை அப்டேட் செய்யுங்கள் என லிங்க் அனுப்பி, அந்தரங்க தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
நடிகை அதா சர்மா வீட்டில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

‘தி கேரளா ஸ்டோரி’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான அதா சர்மாவின் வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது. தனது பாட்டியுடன் எடுத்த குறும்பான போட்டோக்களை அவர் வெளியிடுவார். பாட்டி – பேத்தி காம்பினேஷனை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அவர்களுக்கெல்லாம் சோக செய்தியாக, அதா சர்மாவின் பாட்டி இன்று காலமானார். தமிழில் சார்லி சாப்ளின் 2, இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் அதா சர்மா நடித்துள்ளார்.
News November 23, 2025
இதில் உங்களுக்கு பிடிச்ச பேட் எது?

சிறுவயதில் வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடிய பொழுதுகள் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அப்போது, அவரவர் பேவரைட் கிரிக்கெட் ஹீரோக்கள் பயன்படுத்தும் பேட்டில் இருக்கும் ஸ்டிக்கரை பார்த்து அதே பேட்டை நாமும், அலைந்து திரிந்து அடம்பிடித்து வாங்கி இருப்போம். மேலே சில பேட்களை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். கடைசி போட்டோஸை மிஸ் பண்ணாதீங்க. இதில், உங்களது பேவரைட் பேட் எது? SHARE
News November 23, 2025
மணிரத்னத்திற்கே NO சொன்னாரா சாய் பல்லவி?

கமல், ரஜினி, ஷாருக்கான் என முன்னனி நடிகர்களே மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முன்னுரிமை கொடுப்பார்கள். நிலைமை இப்படி இருக்க, புதிய படத்திற்கான கதை சொல்ல சாய் பல்லவியை மணிரத்னம் அலுவலகத்திற்கு அழைத்துள்ளாராம். ஆனால், சாய் பல்லவி செல்லவில்லையாம். வேறு ஒருவரை அனுப்பி கதை சொன்னாலும், கதை பிடிக்கவில்லை என கூறி நடிக்க மறுத்துவிட்டதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது.


