News July 15, 2024

மதுரையில் காலை உணவுத் திட்டம் தொடங்கியது

image

தமிழ்நாட்டின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், காமராஜர் பிறந்த நாளான இன்று தொடங்கப்பட்டது. மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில், ஐடி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு, முதலமைச்சரின் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து அவர்களுடன் காலை உணவை சாப்பிட்டார்.

Similar News

News September 4, 2025

தற்காலிக ஊழியர்கள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

image

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பில் சுமார் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதன் எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்தனர். பின்னர் இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதில் வரி குறைப்பு சலுகை பெற்றவர்கள் அபராதத்துடன் உரிய தொகையை திரும்ப செலுத்திவிட்டனர். இதனால் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News September 4, 2025

மதுரையில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

image

மதுரையில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வி.எச்.என். மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் செல்வன் அற்புதராஜ், ஓ.சி.பி.எம். மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் கண்ணன், புனித சார்லஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜான்சி பாலின்மேரி, வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை அழகேஸ்வரி உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News September 3, 2025

மதுரை மக்களே உஷார்! காவல்துறை எச்சரிக்கை!

image

மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை: AI குரல் குளோனிங் மோசடி குறித்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மோசடிகள் நெருங்கியவர்களின் குரலை AI மூலம் பின்பற்றி அவசர நிலை உருவாக்கி பணம் கேட்கலாம். உறவினர்களிடம் நேரடியாக உறுதி செய்ய வேண்டும். தொலைபேசி குரல் மட்டும் நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம். புகார் அளிக்க 1930 அழையுங்கள் அல்லது cybercrime.gov.in செல்லவும். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!