News July 15, 2024

TNPL: சேப்பாக் அணி வெற்றி

image

TNPL T20 தொடரில், திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 7 ஓவரில் 64/6 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடி சேப்பாக் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி 4.5 ஓவரில் இலக்கை எட்டியது. மழை காரணமாக போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 23, 2025

ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி? பாஜக மீது பாய்ந்த TTV

image

NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டுவரப்படும் என பேசுவது, தமிழகத்தை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் செயல் என டிடிவி தினகரன் சாடியுள்ளார். மெட்ரோ ரயில் என்பது மக்களின் கோரிக்கை எனவும், மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, EPS CM ஆனதும் மெட்ரோ கொண்டுவரப்படும் என <<18346144>>வானதி சீனிவாசன்<<>> கூறியிருந்தார்.

News November 23, 2025

போர் நிறுத்தம்: உக்ரைனுக்கு டிரம்ப் வார்னிங்!

image

<<18356688>>ரஷ்ய போர் நிறுத்தம்<<>> தொடர்பான அமெரிக்காவின் வரைவு அறிக்கை, உக்ரைனுக்கான கடைசி சலுகை அல்ல என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வரைவை ஏற்க மறுத்தால், ரஷ்யாவுடன் தனித்து போரிட வேண்டியதுதான் எனவும், வரும் 27-ம் தேதிக்குள் உக்ரைன் சம்மதிக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் போர் நிறுத்தம் தான் தங்களது இலக்கு எனவும், அதை அடைய அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

சினிமா பிரபலம் விபத்தில் பலி.. நெஞ்சை உலுக்கும் (PHOTO)

image

பிரபல பஞ்சாபி பாடகர் <<18360848>>ஹர்மன் சித்து(37)<<>> பயணித்த கார் லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது, பாலிவுட் மற்றும் பஞ்சாபி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்வதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் தனது மகளிடம் அன்பாக பேசிவிட்டு பூ ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார். கவலையில் ஆழ்ந்துள்ள அந்த பிஞ்சு குழந்தைக்கு யார் ஆறுதல் சொல்வது. So sad!

error: Content is protected !!