News July 14, 2024
ஆடி மாத இலவச ஆன்மிகப் பயணத்திற்கு அழைப்பு

தமிழக அரசின் கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தில் 60-70 வயதுடைய மூத்த குடிமக்கள் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. ஆடி மாதத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில் 1000 பேர் அழைத்து செல்லப்படுவர். அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர், கோயில் அலுவலகங்கள் மற்றும் hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறலாம்.
Similar News
News November 22, 2025
எழுதப்படாத கவிதையா ராஷி கண்ணா

ராஷி கண்ணா, இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் சேலையில் கொடுத்திருக்கும் போஸ், அவரை ஓவியம்போல் காட்சிப்படுத்துகிறது. வெள்ளி நிலவின் கீழ் மலர்ந்த நள்ளிரவு தாமரையாக ஜொலிக்கிறார். அவரது ஒவ்வொரு போஸும், எழுதப்படாத கவிதையாக இருக்கிறது. இந்த போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 22, 2025
குழந்தைகள் இதையெல்லாம் கவனிக்கிறாங்க.. கவனம்!

உங்கள் குழந்தைகளுக்கு எதுவும் புரியாது என நினைக்க வேண்டாம். நீங்க செய்யும் ஒவ்வொன்றையும் நோட் பண்றாங்க. குறிப்பாக, ➤குரலை வைத்தே உங்கள் மனநிலையை கணிப்பர் ➤நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துறீங்க என்பதை கவனிப்பர் ➤பிரச்னையை எப்படி கையாள்கிறீர்கள் என்பதை நோட் செய்கிறார்கள் ➤நீங்கள் கற்பிப்பதை நீங்கள் முதலில் ஃபாலோ செய்கிறீர்களா என பார்க்கிறார்கள். எனவே அவர்கள் முன் கவனமா இருங்க பெற்றோர்களே. SHARE.
News November 22, 2025
சபரிமலைக்கு நவ.28 முதல் சிறப்பு பஸ்கள்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து நவ.28 முதல் ஜன.16 வரை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சபரிமலை செல்லும் பக்தர்கள் www.tnstc.in இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிச.27 – 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால் அந்த நாள்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாது.


