News July 14, 2024
X தளத்தில் சாதனை படைத்த பிரதமர் மோடி

X தளத்தில் அதிக நபர்கள் பின் தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, 10 கோடிக்கும் அதிகமானோர் மோடியை பின் தொடர்கின்றனர். அமெரிக்க அதிபர் பைடனை 3.81 கோடி பேரும், துபாய் அதிபர் ஷேக் முகமதுவை 1.12 கோடி பேரும் பின் தொடர்கின்றனர். இந்தியாவை பொறுத்தமட்டில், ராகுல் காந்தியை 2.64 கோடி பேரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 2.75 கோடி பேரும் பின் தொடர்கின்றனர்.
Similar News
News November 22, 2025
கழுத்துவலி, முதுகு வலி இருக்கா? இப்படி தூங்குங்க!

தலையணை இல்லாமல் பலராலும் தூங்க முடியாது. ஆனால் அப்படி தூங்கினால் பல நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *கழுத்து வலி, முதுகு வலியை குறைக்கும் *காலை நேர தலைவலி குறையும் *ஒட்டுமொத்த தூக்கத்தின் தரம் மேம்படும் *முகப்பரு, சுருக்கங்கள் கூட குறையும் *மன அழுத்தத்தின் அளவை குறைக்கும். *அதேநேரம், தலையணையை ஒரேடியாக தவிர்க்காமல், படிப்படியாக உயரத்தை குறைக்க டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News November 22, 2025
நாங்க இன்னமும் ஃப்ரெண்ட்ஸ் தான்பா!

சமீபத்தில் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதால், குஷ்பு மற்றும் கமலின் நீண்ட கால நட்பு குறித்து பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நாங்கள் இன்னமும் ப்ரெண்ட்ஸ் தான் என இருவரும் நிரூபித்துள்ளனர். ஏர்போர்ட்டில் அவர்கள் ஜாலியாக பேசி வந்த புகைப்படங்களை குஷ்பு தனது SM-ல் பகிர்ந்த நிலையில், ரசிகர்கள் இந்த நட்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
News November 22, 2025
சற்றுமுன்: CM ஸ்டாலின் நேரில் கண்ணீர் அஞ்சலி

உடல்நலக் குறைவால் மறைந்த <<18358061>>மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின்<<>> உடலுக்கு CM ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, கவிஞர் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு அன்புமணி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நாளை மாலை அரும்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.


