News July 14, 2024
உரிமம் இல்லாத இடத்தில் மது அருந்தினால் இனி சீல்

புதிய தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன் 5ஏ பிரிவில், மது அருந்த உரிமம் இல்லாத இடத்தை பயன்படுத்தும் குற்றத்திற்காக அந்த இடத்தை வேறு யாரும் பயன்படுத்தாமல் தடுக்கும் நோக்கில் பூட்டி சீல் வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மதுபானம் தொடர்பான விளம்பர குற்றத்திற்கு 2-5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.1 லட்சம் – ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
சர்வதேச விழாவில் ராணுவத்தை பெருமைப்படுத்திய SRK

மும்பையில் நடந்த சர்வதேச அமைதி விருதுகள் விழாவில், மும்பை (26/11), பஹல்காம், டெல்லி தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாருக்கான் அஞ்சலி செலுத்தினார். பின்பு, பாதுகாப்பு படையினரை குறிப்பிட்டு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என யாராவது கேட்டால், நாட்டை பாதுகாக்கிறேன் என்று சொல்லுங்கள்; என்ன சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டால், 140 கோடி மக்களின் ஆசிர்வாதங்களை சம்பாதிக்கிறேன் என்று சொல்லுங்கள் என்றார்.
News November 23, 2025
மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தல்

வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், நாளைக்குள் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்று IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது வரும் 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், அந்தமான் கடல்பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 23, 2025
ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி? பாஜக மீது பாய்ந்த TTV

NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டுவரப்படும் என பேசுவது, தமிழகத்தை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் செயல் என டிடிவி தினகரன் சாடியுள்ளார். மெட்ரோ ரயில் என்பது மக்களின் கோரிக்கை எனவும், மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, EPS CM ஆனதும் மெட்ரோ கொண்டுவரப்படும் என <<18346144>>வானதி சீனிவாசன்<<>> கூறியிருந்தார்.


