News July 14, 2024
காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் சபாநாயகர்

ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் நாளை காலை(15.7.2024) தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைக்க உள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News November 13, 2025
நெல்லை மாவட்டத்திற்கு தேசிய விருது

2024ம் ஆண்டிற்கான 6வது தேசிய தண்ணீர் விருதுக்காக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் குழு நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நீர் மேலாண்மை தொடர்பான பணிகளை ஆய்வு செய்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்காக விருது வழங்கப்படுகிறது. வருகிற 18ம் தேதி இந்த விருதை மாவட்ட ஆட்சியர் பெறுகிறார்.
News November 13, 2025
நெல்லை: கர்ப்ப கால நிதி ரூ.18,000 பெறுவது எப்படி?

நெல்லை மக்களே முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 18,000 வழங்கப்படுகிறது. இங்கு <
1.ஆதார் அட்டை
2.வீட்டு பில், வாக்காளர் அட்டை
3.மருத்துவசான்றிதழ்
4.பாஸ்போர்ட் புகைப்படம்
5.பிறப்பு சான்றிதழ் (தாய்)
இந்த ஆவணங்களை சமர்பித்து ரூ. 18,000/- சுலபமாக பெறலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News November 13, 2025
நெல்லை: வேன் கவிழ்ந்து விபத்து; இருவர் பலி

இன்று கன்னியாகுமரி சென்று விட்டு பாட்டபத்து பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று நாங்குநேரி அருகே வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாங்குநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


