News July 13, 2024

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா அமல்

image

புதிய தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா 2024 இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கைகள் எடுக்கும் வகையிலும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், இன்று அமலுக்கு வந்துள்ளது.

Similar News

News November 22, 2025

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. RBI விளக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் <<18352591>>குறைந்து ₹89.46 ஆக<<>> உள்ளது. இதனால், கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக்ஸ் போன்ற இறக்குமதி பொருள்களுக்கு அதிக ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். இந்நிலையில், இந்தியாவிடம் போதிய அளவில் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாகவும், நாட்டில் நிதிநிலைத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

ஆஸ்கர் வென்ற நடிகருக்கு வீடு கூட இல்லையாம்!

image

2 முறை ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி, வசிப்பதற்கு கூட வீடு இல்லாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்களில் சட்டப்போராட்டங்களை நடத்தி, அனைத்து சொத்துக்களை இழந்துவிட்டதாகவும், தற்போது பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மார்டின் ஸ்கார்சஸியும், டாரண்டினோவும் பட வாய்ப்பு வழங்கினால், தனது நிலைமை மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

இனி ஓராண்டு வேலை செய்தாலே Gratuity!

image

ஊழியர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் வேலை செய்தால், அவருக்கு Gratuity எனும் சிறப்பு பணத்தொகுப்பு வழங்கப்படும். இந்த விதியை மத்திய தொழிலாளர் அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி, ஊழியர் ஓராண்டு வேலை செய்தாலே Gratuity வழங்கப்பட வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இது புலம்பெயர் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!