News July 13, 2024

உயிரிழப்பு 4 ஆக உயர்வு

image

சிவகாசி அருகே காளையார்குறிச்சி சுப்ரீம் பட்டாசு ஆலையில் கடந்த 9 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
மேலும் தீக்காயமடைந்த சரோஜா, சங்கரவேல் ஆகிய இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சரோஜாவும் இன்று காலை சங்கரவேல் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Similar News

News October 14, 2025

விருதுநகர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News October 14, 2025

விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் வரும் அக். 17ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

விருதுநகர் ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

image

விருதுநகர் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 50 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <>www.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் APPLYஐ கிளிக் செய்து பெயர் உள்ளிட்ட விவரங்கள், கல்வி சான்று, வகுப்பு சான்று, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். சொந்தஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!