News July 13, 2024
கரூர் மாவட்ட எஸ்பி அதிரடி

கரூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளில் எஸ்பி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று கரூர் டவுன், கரூர் ரூரல், குளித்தலை உட்கோட்ட காவல் துறை சார்பில், 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடந்தது. அதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடத்தினர்.
Similar News
News August 22, 2025
கரூர்: செல்போன் தொலஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம்.<
News August 22, 2025
கரூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

கரூர்: மின் அலுவலகத்திற்கு உட்பட்ட சஞ்சய் நகர் மின்பாதையில் இன்று(ஆக.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அருள் நகர், சுந்தர் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், திருமால் நகர் ,மருத்துவ நகர் ,அமிர்தாம்பாள் நகர், சஞ்சய் நகர், சாந்தி நகர் ,அர்ச்சனா நகர், அம்மன் சிட்டி, பழனியப்பா நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
கரூர்: மனைவி முன்பே கணவர் துடிதுடித்து பலி!

கரூர்: சின்னகோதுரைப் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(52). இவர் தனது மனைவி செல்வி(44), மகள் தனுசியா(14) ஆகியோருடன் காரில் கரூரை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது க.பரமத்தி அருகே பவுத்திரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பொன்னுசாமி பலியானார். அவரது மனைவி, மகள் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.