News July 13, 2024
ரத்த சோகை நீங்க வேண்டுமா?

உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு ரத்த சோகையே காரணம் என மருத்துவம் சொல்கிறது. கீழ்காணும் உணவுகளை உட்கொண்டால் அதை சரி செய்யலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
*கீரை வகைகள், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலியை உணவில் அதிகம் சேர்த்தால் ரத்த சோகை குறையும் *இறைச்சி உணவுகளை வாரம் 3 முறை எடுத்து கொண்டாலும் ரத்த சோகை நீங்கக்கூடும் *தினசரி உணவில் பீட்ரூட்டை சேர்த்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
Similar News
News November 21, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தக நேர முடிவில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 89.46 ஆக சரிந்தது. நேற்றுடன் ஒப்பிடுகையில், இது 0.86% சரிவாகும். அதாவது, ஒரே நாளில் 67 பைசா சரிந்துள்ளது. டாலரின் தேவை அதிகரித்தது, ரிசர்வ் வங்கியின் ஆதரவு குறைந்தது போன்றவை இச்சரிவுக்கு காரணம். ரூபாய் மதிப்பு சரிவால், நமது இறக்குமதி செலவுகள் உயரும்.
News November 21, 2025
ஹலோ ஹலோ சுகமா.. ட்ரை பண்றீங்களா?

‘ஹலோ’ என்ற வார்த்தையை இன்று ஒரு சிறப்பு தினமாக கொண்டாடுகிறோம். 1973- ம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் எகிப்து, சிரியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போரில், பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் ‘உலக ஹலோ தினம்’ என்பதை ஃபிரியன், மைக்கேல் சகோதரர்கள் அறிமுகப்படுத்தினர். இந்த நாளில், பிரிந்த உறவுகளிடம் கூட ஹலோ சொல்லி உறவை புதுமையாக்கலாம். நீங்கள் யாருக்கு ஹலோ சொல்ல போறீங்கனு கமெண்ட் பண்ணுங்க.
News November 21, 2025
பட நிகழ்ச்சியில் பாடல் பாடியதற்கு ₹1 கோடி சம்பளமா?

பட தயாரிப்பை விட, அதன் புரமோஷனுக்கே அதிகம் செலவிடுவதற்கு சமீபத்தில் நடந்த ‘வாரணாசி’ பட நிகழ்ச்சியே சாட்சி. டைட்டில் ரிலீஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் ₹27 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மற்றுமொரு ஆச்சரியமடைய வைக்கும் செய்தியும் வெளியாகியுள்ளது. இதே ஈவென்ட்டில், ஒரு பாடல் நிகழ்ச்சியை நடத்திய ஸ்ருதிஹாசனுக்கு ₹1 கோடி சம்பளம் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


