News July 13, 2024

சில்லறை பணவீக்கம் உயர்வு!

image

அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் குறைந்த அளவாக சில்லறை பணவீக்கம் கடந்த மே மாதம் 4.75% ஆக இருந்த நிலையில், ஜூனில் 5.08% ஆக உயர்ந்துள்ளது. (ஊர்ப்புறம் 5.6 % & நகர்ப்புறம் 4.3% அதிகரித்துள்ளது) உணவு பொருள்களின் பணவீக்கம் 9.4% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 23, 2025

குமரி: 8 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

image

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஷகீலா இவருக்கு 19 ஆண்டுகளாக குழந்தை இல்லை. களியக்காவிளை பகுதியில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 5 நாட்களாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். 8 மாத கர்ப்பிணியான அவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை.

News November 23, 2025

விஜய்க்கு இது நல்ல பாடம்: தமிழிசை

image

பிஹாரில் ஜன் சுராஜுக்கு ஏற்பட்ட படுதோல்வி, விஜய்க்கும் சீமானுக்கு ஒரு பாடம் என தமிழிசை கூறியுள்ளார். பல மாநில தேர்தல்களில் வெற்றியை நிர்ணயித்துக் கொடுத்த அரசியல் விற்பன்னர் PK-வுக்கே மக்கள் துணையில்லை எனவும் வெறும் விளம்பரமோ, அலங்கார அரசியலோ வேலைக்கு ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களோடு பயணித்தால் மட்டுமே அவர்கள் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.

News November 23, 2025

விலை கிடுகிடு உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

image

TN-ல் தக்காளி, கத்திரிக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்று மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ₹50 – ₹60-க்கும், சில்லறை விற்பனையில் ₹80 – ₹100 வரை விற்பனையாகிறது. அதேபோல், சாம்பார் வெங்காயம் கிலோ ₹70 – ₹80, கத்தரிக்காய் ₹50 – ₹70-க்கு விற்பனையாகிறது. கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ₹58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!