News July 12, 2024
ஜூன் 4 மோடி தோல்வி தினம்: காங்., பதிலடி

ஜூன் 4ஆம் தேதி மோடி தோல்வி தினமாக கடைபிடிக்கப்படும் என்று காங்கிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதை நினைவுப்படுத்தும் வகையில், ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என அமித்ஷா அறிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக காங்., இவ்வாறு அறிவித்துள்ளது.
Similar News
News November 21, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (21.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
சற்றுமுன்: பிரபல நடிகர் காலமானார்

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தயாரித்து இயக்கிய UNBROKEN படத்தில் நடித்த பிரபல நடிகர் ஸ்பென்சர் லோஃப்ராங்கோ(33) இளம் வயதில் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Gotti, King Cobra, Dixieland உள்ளிட்ட படங்கள் மூலம் உலகம் முழுவதும் அவர் பிரபலமானார். அவரது இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. ஸ்பென்சர் மறைவுக்கு ரசிகர்களும் ஹாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News November 21, 2025
இன்று முதல் அமலுக்கு வந்தது… 4 புதிய தொழிலாளர் சட்டங்கள்

மத்திய அரசு உருவாக்கியுள்ள 4 தொழிலாளர் நலச் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ளன. தற்போதுள்ள பணிச்சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, ஏற்கெனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டு ஊதியச் சட்டம்(2019), தொழில் உறவுகள் சட்டம்(2020), சமூக பாதுகாப்பு சட்டம்(2020), பணியிட பாதுகாப்பு, உடல்நலம் & பணிச்சூழல் சட்டம்(2020) ஆகிய நான்கு சட்ட தொகுப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன.


