News July 12, 2024
கலாசாரத்தை கற்றுத் தர வேண்டும்: பவன்

ஆந்திராவில் 8 வயது சிறுமியை, 6-7ஆம் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஆழமான அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இளவயதினர் பல்வேறு காரணங்களால் கெட்டுப்போய்விட்டதாகவும், நமது கலாசாரத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து உணர்த்தவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 21, 2025
திருவாரூரில் மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 26-ம் தேதி திருவாரூரில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உதவி எண்கள் அறிவித்த மாவட்ட ஆட்சியர், திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக 04366-1077 , 04366-226623 மற்றும் WhatsApp: 9043989192 , 9345640279 உள்ளிட்ட எண்களை அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளளாம் என அறிவித்துள்ளார்.
News November 21, 2025
மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும்: ராமதாஸ்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திட்டம் தொடர்பான அறிக்கையை 2024-ல் அனுப்பிய தமிழ்நாடு அரசு, அதற்கான பூர்வாங்க பணிகளையும் தொடங்கியுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
News November 21, 2025
‘சிக்கன் 65’ பெயர் வந்தது எப்படி தெரியுமா?

அசைவ பிரியர்களின் விருப்பமான உணவு ‘சிக்கன் 65’. அதை விரும்பி சாப்பிடும் பலருக்கும் அதன் பெயர் காரணம் தெரியாது. உண்மையில் இந்த பெயர் வந்தது தமிழகத்தில் இருந்து தான். 1965-ல் சென்னை புஹாரி ஹோட்டல் உரிமையாளர் AM புஹாரி தான், இதை முதலில் அறிமுகப்படுத்தினார். மசாலாவில் ஊறவைத்து பொறித்த கோழிக்கறியை புதிய டிஷ் ஆக அறிமுகம் செய்த அவர், அந்த ஆண்டை வைத்து ‘சிக்கன் 65’ என்று குறிப்பிட அது பிரபலமாகிவிட்டது.


