News July 12, 2024
“ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்”

ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நெருக்கடி காலத்தில் எந்த தவறும் இன்றி, லட்சக்கணக்கான மக்கள் சிறைக்கு சென்றதாகவும், இதை நினைவுபடுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இத்தினம் கடைபிடிக்கப்படும் எனவும் அமித்ஷா அறிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

TRAI தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ் செல்போனின் IMEI நம்பர், மோடம், சிம் கார்டு, ரேடியோ ஆகியவற்றில் அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாகும். இதனை மீறுவோருக்கு 3 ஆண்டு ஜெயில் (அ) ₹50 அபராதம் (அ) 2-ம் சேர்த்து விதிக்கப்படும் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரித்துள்ளது. இதனால், second Hand-ல் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வாங்குவோர் ஜாக்கிரதையாக இருங்கள்.
News November 22, 2025
₹95000000000… அம்மாடியோவ்!

நிதி மோசடி மற்றும் நீதிமன்ற ஆணைகளை பின்பற்றாதது ஆகிய குற்றங்களுக்காக, அமெரிக்க நீதிமன்றம் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 1.07 பில்லியன் டாலர் (₹9500 கோடி) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பைஜூஸின் அமெரிக்க கிளையான பைஜூஸ் ஆல்பா நிறுவனத்தின் பணம், மோசடியாக வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும், விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் நடந்துவந்த வழக்கில் தான் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
News November 22, 2025
95.78% பேருக்கு SIR படிவங்கள் கொடுத்துவிட்டோம்: ECI

தமிழகத்தில் நவ.4-ல் தொடங்கிய SIR படிவங்கள் வழங்கும் பணிகளை, டிச.4-க்குள் முடிக்க வேண்டும் என்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 95.78% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக ECI தெரிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட 35.86% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.


