News July 12, 2024

OPS, TTV, சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை: இபிஎஸ்

image

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி, வைத்தியலிங்கத்திற்கு அதிமுகவில் எந்த காலத்திலும் இடமில்லை என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை இணைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று மூத்த நிர்வாகிகளை சந்தித்தபோது, கட்சியில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என இபிஎஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

image

இன்னும் 2 நாள்களில் புயல் உருவாக உள்ளதால், டெல்டா & தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து அந்தந்த கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மழை பெய்து வருவதால் மேலும் பல மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 24, 2025

நம்பித்தானே கொடுத்தேன்: கோபமான தோனி

image

2019 IPL-ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில், டெத் ஓவர் CSK வீரர் தீபக் சாஹரிடம் கொடுக்கப்பட்டது. முதல் 2 பந்துகள் no ball ஆனது. இதனால், ‘நீ முட்டாள் இல்லை, நான் தான் முட்டாள், உன்னை நம்பித்தானே பந்தை கொடுத்தேன்’ என்று தோனி திட்டியதாக சாஹர் நினைவுகூர்ந்துள்ளார். இதனையடுத்து, 5 ரன்கள் மட்டுமே கொடுத்த சாஹர், 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த போட்டியில் CSK-வும் வென்றது குறிப்பிடத்தக்கது.

News November 24, 2025

வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா?

image

தினமும் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தால் சில நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
*மன அழுத்தம் குறையும்.
*ரத்த ஓட்டம் சீராகும்.
*தலைவலி குறையும்.
*தசைவலி, தசைப்பிடிப்பு இல்லாமல், தசைகளை தளர்வோடு வைத்திருக்கும்.
*பாத வெடிப்புகள் இருந்தால், அவை சரியாகும்.
உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!