News July 12, 2024
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் கொலை

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் புகுந்து, மர்ம நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் பணியாற்றும் முத்துலட்சுமி என்ற பெண் ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர், முத்துலட்சுமி அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றுள்ளார். வெட்டப்பட்ட முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 6, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
மதுரை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

மதுரை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
மதுரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

மதுரையில் வைகை இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்களில் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் வைகை வடகரை, தென்கரைப் பகுதியில் 21 வார்டுகளில் செப்டம்பர் 6 (நாளை) மற்றும் 7 (நாளை மறுநாள்) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. வார்டு எண்கள் 27 முதல் 34 மற்றும் 75 முதல் 93 வரை உள்ள பகுதிகளில் லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்தி கொள்ளலாம். SHARE IT..