News July 11, 2024
ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு சைபர் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, Android 12, 12L, 13 மற்றும் Android 14க்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஃபோன்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 21, 2025
FLASH: வார இறுதியில் சரிவைக் கண்ட சந்தைகள்

பங்குச்சந்தைகள் கடந்த 2 நாள்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், வார இறுதி நாளான இன்று(நவ.21) சரிவைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 399 புள்ளிகள் சரிந்து 85,233 புள்ளிகளிலும், நிஃப்டி 128 புள்ளிகள் சரிந்து 26,063 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. ஆனாலும் கூட TCS, Kotak Mahindra, M&M ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2% வரை உயர்ந்துள்ளன.
News November 21, 2025
போலி ORS கலவைகளை உடனே அகற்ற FSSAI உத்தரவு

‘ORS’ என்று தவறாக விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் எலக்ட்ரோலைட் பானங்களை உடனடியாக விற்பனையில் இருந்து அகற்ற மாநிலங்களுக்கு, FSSAI உத்தரவிட்டுள்ளது. உண்மையான ORS என்பது வயிற்றுப்போக்கு நோய்களின் போது நீரிழப்பை தடுக்கும் WHO பரிந்துரைத்த மருந்து. எனவே, WHO அங்கீகாரம் பெற்ற ORS கலவைகளை மட்டுமே விற்க வேண்டும் எனக்கூறியுள்ள FSSAI, விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
News November 21, 2025
தமிழக விரோத நிலைப்பாட்டில் பாஜக: திருமாவளவன்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்புக்கு BJP-ன் தமிழக விரோத நிலைப்பாடே காரணம் என்று திருமாவளவன் சாடியுள்ளார். 2011 மக்கள் தொகை விவரங்களை காட்டி திட்டத்தை நிராகரிப்பது சரியானது அல்ல என்றும், அங்கு கடந்த 14 ஆண்டுகளில் மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் சிறிய ஊர்களுக்கு கூட மெட்ரோ ரயில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


