News July 11, 2024
காவல்துறை மீது ஆம்ஸ்ட்ராங் குடும்பம் அதிருப்தி?

ஆறுதல் சொல்வதற்காக ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வரிடம், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்க அவரது குடும்பத்தினர் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த திமுக நிர்வாகிகள், தலைவர் வரும் போது சங்கடப்படுத்தும் மாதிரியாக எதுவும் பேசிவிட வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். அதனால்தான், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் அமைதி காத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 21, 2025
ரோடு ஷோவுக்கு வழிகாட்டுதல்கள் ரெடி

ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை மெட்ராஸ் HC-ல் TN அரசு சமர்ப்பித்துள்ளது. நிகழ்விடத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பே மக்கள் கூடுவதை தவிர்க்குமாறும், அனுமதி விண்ணப்பத்தில் தலைமை விருந்தினர்களின் வருகை&புறப்படும் நேரத்தை குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரே பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
News November 21, 2025
Bro Code டைட்டில்: குழப்பத்தில் ரவி மோகன்

ரவி மோகன் தயாரிக்கும் படத்திற்கு ‘Bro Code’ டைட்டிலை பயன்படுத்த தடையில்லை என்று சென்னை HC உத்தரவிட்டுள்ளது. ரவி மோகன் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இதே விவகாரத்தில் மதுபான நிறுவனம் தொடர்ந்த வழக்கில், டெல்லி ஐகோர்ட் ‘Bro Code’ பெயரை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனால் எந்த ஐகோர்ட்டின் உத்தரவு செல்லும் என்ற குழப்பத்தில் ரவி மோகன் உள்ளார்.
News November 21, 2025
அரசு ஊழியர்களுக்கு திமுக மீண்டும் துரோகம்: அன்புமணி

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்ததன் மூலம், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படாது என்பது உறுதியாகியுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்காமல், அவர்களுக்கு திமுக அரசு மீண்டும் ஒரு துரோகத்தை செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


