News July 10, 2024
நடிகர் யோகிபாபு மாணவர்களுக்கு அறிவுரை

திருவள்ளூரில் உள்ள இந்திரா கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் யோகிபாபு மாணவர்கள் சாதி மதமின்றி பழகுங்கள் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
Similar News
News August 31, 2025
திருவள்ளூர்: சம்பள பிரச்சனையா? ஒரு CALL போதும்

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147. ஆட்சியர் அலுவகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 31, 2025
BREAKING: திருவள்ளூர் எம்.பி 3வது நாளாக…. பரபரப்பு

மத்தியரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் மருத்துவமனையிலும் உணவு உண்ண மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்தியரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
News August 31, 2025
திருவள்ளுர்:அதிகாரிகளால் ரூ.12 கோடி வீண்; கலெக்டர் உத்தரவு

திருவள்ளுர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளுக்கு, 2023 – 24ம் ஆண்டு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், 12.97 கோடி ரூபாய் பணிகளை கலெக்டர் பிரதாப் ரத்து செய்து, நிதியை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் ரூ.3,32,46,204 திருப்பி அனுப்ப பட உள்ளது.