News July 9, 2024
சர்தார் பட்டேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பங்களித்த நபர்களுக்கு “சர்தார் பட்டேல் தேசிய ஒற்றுமை விருது 2024” வழங்கப்படவுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் தகுதியுடைய நபர்கள் (https://awards.tn.gov.in) என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
குறைதீர் கூட்டத்தில் 514 மனுக்கள் பெறப்பட்டன

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 514 மனுக்கள் பெறப்பட்டன.
News April 21, 2025
சிவகங்கையில் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற 25.04.2025 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News April 21, 2025
சிவகங்கை: வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுலகத்தில் வருகின்ற 25ஆம் தேதி காலை 10:30 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே வேலை நாடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க