News July 9, 2024
ராமநாதபுரம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தெற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கிமீ வேகத்தில் காற்றுவீசும். அதேபோல் தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக் கடல், மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News September 11, 2025
ராமநாதபுர இளைஞர்களே போலீசில் சேர ஆசையா..!

தமிழகத்தில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர், சிறைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் 3665 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வினை எழுத ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சியை பெற நேரிலோ அல்லது
0456-7230160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வெளியிட்டுள்ளார்.
News September 11, 2025
பரமக்குடியில் வீடுகளில் புகுந்த மழை நீர்

பரமக்குடி நகராட்சி 12வது வார்டு ஜி.வி.பந்த் தெருவில் முறையற்ற வாறுகால் காரணமாக கனமழையில் 10க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வீடுகளுக்குள் மழை, கழிவுநீர் புகுந்து தொழில் பாதிப்பு ஏற்பட்டது. முன்னர் வாறுகால் சீரமைப்பு, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக நகராட்சி பதிலளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மனு அனுப்பினர். நகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 11, 2025
ராமநாதபுரத்தில் குவிந்துள்ள போலீஸ் பட்டாளம்

பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு நாளில்7000 போலீசார்,52 கண்காணிப்பு வாகனங்கள்,38 சோதனைச்சாவடிகள், 500சிசிடிவி,3 100 கேமராக்கள்(ம) 3வாகன நிறுத்துமிடங்கள் பாதுகாப்பில் உள்ளனர். டிரோன் மூலம் நேரலை கண்காணிப்பு நடைபெறுகிறது. அனுமதியின்றி வந்த டூவீலர்,வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.15 டாக் ஸ்குவாடுகள் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.