News July 9, 2024
சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும்: இபிஎஸ்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை என சட்டம், ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகக் கூறிய அவர், சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என்றால் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
தேமுதிக கூட்டணி முடிவை தாமதிக்க இதுதான் காரணமா?

கூட்டணி நிலைப்பாட்டில் காங்கிரஸின் இரட்டை மனநிலையே தேமுதிக கூட்டணி முடிவை அறிவிக்காததற்கு காரணம் என புதிய தகவல் கசிந்துள்ளது. திமுக கூட்டணியில் இருக்கிறோம் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தாலும், தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால், காங்., TVK பக்கம் சென்றால், தேமுதிகவும் அங்கு செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
News February 6, 2026
பாஸ்வேர்டுகளை AutoFill செய்கிறீர்களா?

உங்கள் போனில் பேஸ்புக், எக்ஸ் போன்றவற்றில் உள்நுழையும்போது பாஸ்வோர்டை AutoFill செய்பவரா? நீங்கள் பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள். IIIT ஹைதராபாத்தின் ஆராய்ச்சியில், இப்படி AutoFill செய்வது செக்யூரிட்டி வேலையை குறைக்கிறதாம். இதனால், உங்களின் போன் சைபர் கிரிமினல்கள் ஈசியாக ஹேக் செய்யப்பட்டு விடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. எனவே, இனி உங்களின் அனைத்து பாஸ்வோர்டுகளையும் டைப் செய்யுங்கள். SHARE IT.
News February 6, 2026
விஜய்யால் விரக்தியில் தவெகவினர்?

கட்சியில் எந்த பணியும் முழுமையாக நடக்கவில்லை என தவெகவினர் குமுறுவதாக கூறப்படுகிறது. அனைத்து மண்டலங்களிலும் பூத் கமிட்டி மாநாடு நடக்கும் என கூறியதோடு சரி, அதை நடத்தவில்லை, மக்களிடம் வாங்கப்பட்ட மனுக்கள் கிடப்பில் உள்ளன, திங்கள்தோறும் நிர்வாகிகளை தலைவர் சந்திப்பார் என கூறப்பட்டது ஆனால் சந்திக்கவில்லை, சுற்றுப்பயணமும் சரிவர நடக்கவில்லை என நிர்வாகிகள் சிலர் விரக்தியில் உள்ளதாக பேசப்படுகிறது.


