News July 9, 2024

ரவுடியிசத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை

image

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அரசியல் கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று எதன் அடிப்படையில் சொல்கிறார்கள்?. புள்ளி விவரங்கள்படி, பார்த்தால் குறைவான குற்றச்சம்பவங்களே நடந்திருக்கிறது. இருப்பினும், ரவுடியிசத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்” எனப் பதிலளித்துள்ளார்.

Similar News

News January 18, 2026

காஞ்சி பெண்களே: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

image

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் தாட்கோ <>இணையதளத்தில் <<>>விண்ணப்பித்துக் கொள்ளலாம்! ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

ஒரு போன் எப்போது Expiry ஆகும் தெரியுமா?

image

செல்போனுக்கும் Expiry date இருக்கிறது. ஆனால் அதை நிறுவனங்கள் நேரடியாக சொல்வதில்லை. போனின் செக்யூரிட்டி அப்டேட் எப்போது நிற்கிறதோ அதுவே போனின் Expiry தேதியாகும். இவை ஃபோன் பாக்ஸில் இருக்கும். அல்லது settings -> about -> செக்யூரிட்டியில் பார்க்கலாம். இது போன் கம்பெனியை பொருத்து மாறுபடும். சில கம்பெனிகள் ஓரிரு வருடங்களும், ஐபோன்கள் 7 வருடங்கள் வரையும் அளிக்கிறது. உங்க போனின் Expiry date பாருங்க!

News January 18, 2026

கலைத்துறையில் அரசியல் தலையீடா? CM ஸ்டாலின்

image

2026-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கலைத்துறையில் அரசியல் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறியுள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா, மலையாளம், பெங்காலி படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுடன் ₹5 லட்சம் வழங்கப்படும் எனவும் <<18887820>>பன்னாட்டு புத்தகத் திருவிழாவில்<<>> அவர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!