News July 9, 2024
பைடனுக்கு எதிராக ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் போர்க்கொடி

அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் (81) களத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். நேரடி விவாதத்தில் திணறியது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜெர்ரி நட்லர், ஜோ மாரேல்லே உள்ளிட்ட 10 எம்.பி.,க்கள் அதிபர் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 18, 2026
தேர்தலில் முந்தும் அதிமுக.. திமுக அதிர்ச்சி

கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாவிட்டாலும் தேர்தல் அறிக்கையில், திமுகவை முந்திக் கொண்டது அதிமுக. இதற்கு <<18885829>>ஜோதிடம்<<>> ஒரு காரணமாக கூறப்பட்டாலும், திமுகவின் சில திட்டங்கள் கசிந்தது மற்றொரு காரணம் என்கின்றனர். குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்தி அறிவிக்க திமுக திட்டமிட்டிருந்ததாம். அதனால், முதலில் துண்டை போட்டு EPS அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால், திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
News January 18, 2026
வெற்றிக்கு நாள், நேரம் குறிச்சாச்சு: எல்.முருகன்

PM மோடியின் TN வருகை திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில் இருக்கும் என L.முருகன் (MoS) தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, திருவனந்தபுரம் தேர்தல் வெற்றிகள் TN-லும் எதிரொலிக்கும் எனவும், அதற்கான நாள், நேரம் குறிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே NDA கூட்டணி வாக்குறுதியாக அளிக்கும் எனக் கூறிய அவர், திமுகவை போல் மக்களை ஏமாற்றாது என்றும் சாடியுள்ளார்.
News January 18, 2026
EPS-ன் ‘ஜோதிட’ வியூகம்!

அதிமுக முதல் கட்டமாக 5 தேர்தல் <<18879658>>வாக்குறுதிகளை<<>> வெளியிட்டது. இந்நிலையில், ஜோதிடர்களின் அறிவுரைப்படி இந்த வாக்குறுதிகள் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி காலை 11 மணிக்கு சரியாக EPS வாக்குறுதிகளை அறிவித்தார். நேற்று சிவராத்திரி, சதுர்த்தசி திதி மற்றும் சுப ஓரை, EPS-க்கு சாதகமாக இருந்ததால், ஜோதிடர்கள் அறிவுரைப்படி வாக்குறுதியை அறிவித்ததாக கூறப்படுகிறது.


