News July 9, 2024
சரத்பவார் நன்கொடை வசூலித்துக்கொள்ள அனுமதி

சரத்பவார் தலைமையிலான என்.சி.பி., சரத் சந்திர பவார் கட்சி தேர்தல் நன்கொடை வசூலித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மஹாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் செலவுகளுக்கு நிதித் திரட்ட அனுமதிக் கோரி சரத்பவார் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை பரிசீலித்த ஆணையம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
Similar News
News January 22, 2026
அரியலூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

அரியலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News January 22, 2026
அரசியலில் ‘விசில்’ சின்னத்தின் வரலாறு

அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விஜய்யின் தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்ட ‘விசில்’ இன்று பொதுச் சின்னமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் 2019-ல் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், தமிழகத்தில் 2021-ல் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் மயில்சாமிக்கும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.
News January 22, 2026
4 நாள்கள் தொடர் விடுமுறை

4 நாள்கள் தொடர்ச்சியாக வங்கிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜன.24 (4-வது சனி), ஜன.25. (ஞாயிறு), ஜன.26 (குடியரசு தினம்) ஆகிய 3 நாள்கள் ஏற்கெனவே விடுமுறையாகும். இந்நிலையில், வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி வழங்கக்கோரி ஜன.27-ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அதனால், வங்கிக்கு சென்று முடிக்க வேண்டிய பணிகளை நாளைக்குள் முடித்துவிடுங்கள் நண்பர்களே!


