News July 8, 2024

செல்வப்பெருந்தகைக்கு தெரியும்: அண்ணாமலை

image

ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்கள் யார் என்பது செல்வப்பெருந்தகைக்கு தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். இந்த வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என அவர் குற்றஞ்சாட்டியதற்கு பதிலளித்த அண்ணாமலை, அவரே ஒரு முன்னாள் ரவுடி என்பதால் இந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என செல்வப்பெருந்தகைக்கு தெரியும் என்றார். மேலும், கொலையாளிகள் குறித்த தகவலை அவரிடம் போலீசார் கேட்டுப் பெறலாம் எனவும் யோசனை கூறினார்.

Similar News

News September 24, 2025

தேவர் முதல் விஜய் வரை.. தமிழக அரசியலில் முருகன்

image

வட இந்தியாவில் ராமர், விநாயகர், துர்கா, காளி ஆகிய தெய்வங்கள் அரசியலாக்கப்படுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை வெங்கடாஜலபதி, ஐயப்பன் ஆகியோர் அரசியலுக்குள் உள்ளனர். இந்த பட்டியலில் ‘முருகர்’, தமிழக அரசியல் களத்தில் உள்ளார் என்றே கூறலாம். இந்நிலையில், தமிழகத்தில் முருகனை முன்வைத்து மேற்கொண்ட அரசியல் நிகழ்வுகள் என்னென்ன என்பதை பாருங்கள். பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, உங்கள் கருத்தையும் சொல்லுங்க

News September 24, 2025

Beauty Tips: சொட்டை விழாமல் தடுப்பது எப்படி?

image

​​➤ஒரு நாளுக்கு குறைந்தது 6-8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது நல்லது ➤வாரத்திற்கு 2 முறை வெந்தயத்தை ஊற வைத்து, பேஸ்ட் போல் அரைத்து தலை முடியில் தடவிய பின் குளிக்கவும் ➤அதிகம் கெமிக்கல் இல்லாத ஷாம்பூவை கொண்டு ஹேர் வாஷ் செய்யவும் ➤ஈரமாக இருக்கும் முடியை சீப்பை கொண்டு சீவுவதை நிறுத்தி கொள்ளுங்கள் ➤தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள் ➤அதிகமாக Stress ஆகவேண்டாம். SHARE.

News September 24, 2025

ஜூனில் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ்: ரஜினி

image

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த ‘ஜெயிலர் 2’ அப்டேட் கிடைத்துள்ளது. ஜூன் 2026-ல் ‘ஜெயிலர் 2’ ரிலீசாகும் என்றும் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார். இதனால், உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள் கூலியில் தவறவிட்ட ₹1,000 கோடி வசூலை ஜெயிலர் 2-ல் சாத்தியப்படுத்துவோம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கோலிவுட்டில் எந்த படம் ₹1,000 கோடி அடிக்கும் என நீங்க நினைக்கிறீங்க?

error: Content is protected !!