News July 8, 2024
ரஜினியின் ‘கூலி’ கெட்டப் வைரல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரஜினி தனது கேரவனுக்குள் சாமியாருடன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருக்கும் ரஜினியின் கெட்டப்பை, 1991ல் வெளிவந்த தர்மதுரை படத்துடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
Similar News
News September 24, 2025
மாதம் ₹2,000 உதவித்தொகை.. அமைச்சர் புது அப்டேட்

‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் ₹2,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க செயலி உருவாக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அக்குழந்தைகளுக்கு 18 வயது வரையில் மாதந்தோறும் ₹2,000 வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார். தாய், தந்தை (அ) தாய் (அ) தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
News September 24, 2025
தேவர் முதல் விஜய் வரை.. தமிழக அரசியலில் முருகன்

வட இந்தியாவில் ராமர், விநாயகர், துர்கா, காளி ஆகிய தெய்வங்கள் அரசியலாக்கப்படுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை வெங்கடாஜலபதி, ஐயப்பன் ஆகியோர் அரசியலுக்குள் உள்ளனர். இந்த பட்டியலில் ‘முருகர்’, தமிழக அரசியல் களத்தில் உள்ளார் என்றே கூறலாம். இந்நிலையில், தமிழகத்தில் முருகனை முன்வைத்து மேற்கொண்ட அரசியல் நிகழ்வுகள் என்னென்ன என்பதை பாருங்கள். பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, உங்கள் கருத்தையும் சொல்லுங்க
News September 24, 2025
Beauty Tips: சொட்டை விழாமல் தடுப்பது எப்படி?

➤ஒரு நாளுக்கு குறைந்தது 6-8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது நல்லது ➤வாரத்திற்கு 2 முறை வெந்தயத்தை ஊற வைத்து, பேஸ்ட் போல் அரைத்து தலை முடியில் தடவிய பின் குளிக்கவும் ➤அதிகம் கெமிக்கல் இல்லாத ஷாம்பூவை கொண்டு ஹேர் வாஷ் செய்யவும் ➤ஈரமாக இருக்கும் முடியை சீப்பை கொண்டு சீவுவதை நிறுத்தி கொள்ளுங்கள் ➤தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள் ➤அதிகமாக Stress ஆகவேண்டாம். SHARE.