News July 8, 2024

130 GB டேட்டா இலவசமாக வழங்கும் வோடாபோன் ஐடியா

image

வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனம் மாறாமல் இருக்க வோடாபோன் ஐடியா (Vi) ஏற்கெனவே பல சலுகை வழங்கி வருகிறது. இந்நிலையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், அந்த சலுகையை தானியங்கி குரல் மூலம் நினைவுபடுத்தி வருகிறது. ₹239- ₹3,199 வரையிலான திட்டங்களை ரீசார்ஜ் செய்திருந்தால், 130 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு மாத கடைசியிலும் தலா 10 ஜிபி டேட்டா வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Similar News

News September 24, 2025

Sports Roundup: சிட்னி தண்டர் அணியில் அஷ்வின்

image

*பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக அஷ்வின் விளையாடுவார் எனத் தகவல். * ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 907 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடர்கிறார். * ஆஸி., A அணிக்கு எதிரான 2-வது அன் அபிசியல் டெஸ்டில் படிக்கல், ஜூரெல், நிதிஷ் ரெட்டி தலா 1 ரன்னுக்கு அவுட். *மகளிர் ஸ்பீட் கிளைம்பிங் போட்டியில், ஜோகா பூர்டி புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

News September 24, 2025

கேட்பாரற்று கிடக்கும் ₹67,000 கோடி: திருப்பி தர நடவடிக்கை

image

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,000 கோடி வைப்பு நிதியை, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க RBI அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் இது தொடர்பான விழிப்புணர்வை பயனாளர்களுக்கு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாமலோ அல்லது செலுத்தப்படாமலோ இருந்தால், அவை உரிமைக் கோரப்படாத டெபாசிட் என வகைப்படுத்தப்படும்.

News September 24, 2025

அதிமுக EX அமைச்சருடன் CM ஸ்டாலின் சந்திப்பு

image

MGR அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த HV ஹண்டேவை, CM ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். Dr.ஹண்டே தற்போது பாஜகவில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் கவனம் ஈர்த்துள்ளது. TN அரசின் திட்டங்களை பாராட்டி ஹண்டே தொடர்ந்து கடிதம் எழுதி வந்ததால், அவரை சந்தித்ததாகவும், 99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை சந்தித்தது மகிழ்ச்சி எனவும் CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!