News July 8, 2024

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு

image

அசாமில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் முதல் அசாமில் கனமழை பெய்கிறது. இதனால் பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 3,533 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 24 லட்சம் பேர் கடுமையாக பாதித்துள்ளனர். காசிரங்கா பூங்காவில் 114 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

Similar News

News September 24, 2025

அதிமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதற்குமுன், CM ஸ்டாலின், இபிஎஸ், விஜய் வீட்டிற்கும், GST, வானிலை மைய அலுவலகங்களுக்கும் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

News September 24, 2025

ஆம்லேட் சாப்பிட்டவர் உயிரிழப்பு… சோகம்!

image

உணவை அவசர அவரசமாக விழுங்க கூடாது, நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதற்கு கேரளாவில் நடந்த இச்சம்பவம் ஒரு உதாரணம். விஷாந்தி டி’சோசா என்பவர் சாலையோர கடையில் ஆம்லெட், வாழைப்பழம் வாங்கி அவற்றை வேகவேகமாக விழுங்கியுள்ளார். உணவு தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டதால், சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். சாப்பிடும் போது அவசரப்பட வேண்டாம். இந்த பயனுள்ள எச்சரிக்கையை நண்பர்களுக்கு SHARE செய்யலாமே!

News September 24, 2025

BREAKING: அமைச்சர் ஹாஸ்பிடலில் அனுமதி

image

அமைச்சர் ஐ.பெரியசாமி கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவைக்கு கட்சி பணிக்காக சென்றபோது, அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் வயிற்று வலி காரணமாக, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!